வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

முன்னதாக நேற்று திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. தற்போது டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மாறி மாறி ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வெளியான துணிவு படத்தின் டிரைலர் ஒரு நாளில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் 23 பார்வையாளர்களை பெற்று துணிவுடம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இதுபற்றி ட்விட் போட்டுள்ளார். அதில் துணிவு டிரைலரை ஜி ஸ்டூடியோஸ் யூடியூபில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு 2 மில்லியன் பாலோவர்ஸ்களே இருக்கின்றனர். ஆனால் வாரிசு ட்ரெய்லரை சன் டிவியில் வெளியிட்டார்கள். அவர்களுக்கு 20 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கின்றது. இதை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மையிலேயே அசுரத்தனமாக சாதனை புரிந்தது துணிவு ட்ரைலர் தான் என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Sandy_Krish_/status/1610960622723928065