வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.
முன்னதாக நேற்று திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. தற்போது டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மாறி மாறி ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வெளியான துணிவு படத்தின் டிரைலர் ஒரு நாளில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் 23 பார்வையாளர்களை பெற்று துணிவுடம் தோல்வி அடைந்தது. அதன்படி 24 மணி நேரத்தில் துணிவு திரைப்படத்தின் டிரைலர் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதற்கான ஜி ஸ்டூடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
A rage that just hasn't settled. The #ThunivuTrailer hits 30 MILLION+ views in just 24 hours – extraordinary 🔥https://t.co/mPfG9x1i47#Ajithkumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @NetflixIndia @SureshChandraa #RomeoPictures @mynameisraahul pic.twitter.com/Wh8SznjRj9
— Zee Studios South (@zeestudiossouth) January 1, 2023