தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கோல்டன் குளோப் விருதுகளில் நாமினேட் ஆகியுள்ளது. அதன் பிறகு ஆஸ்கர் விருதுக்கு நாட்டுக்குத்து பாடல் நாமினேட் ஆகியுள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் இணையதளமான வெரைட்டி வெளியிட்டுள்ள சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் இந்தியா சார்பில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இடம் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய நடிகர் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறை. மேலும் நடிகர் ஜூனியர் என்டிஆர் முதல் முறையாக ஆஸ்கர் விருதுக்கான கணிப்பு பட்டியலில் இடம் பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதேபோன்று சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் ராஜமவுலி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.