பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஜோல். இவர் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்சநட்சத்திரமாக உயர்ந்தார். இதையடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து சென்ற 1999ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைசா என்ற மகளும், யுக் என்கிற மகனும் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் பிரபுதேவா உடன் மின்சார கனவு திரைப்படத்தில் கஜோல்  நடித்து உள்ளார். வேலையில்லா பட்டதாரி-2 படத்திலும் நடித்துள்ளார்.

கஜோல் நடிப்பில் சமீபத்தில் சலாம் வெங்கி என்ற படம் வெளியாகியது. கஜோலும், அஜய் தேவ்கனும் பாலிவுட்டை கலக்கிவரும் நிலையில், விரைவில் அவரது மகளும் பாலிவுட்டில் நடிகையாக வலம் வருவார் என்ற பேச்சு அடிபட தொடங்கி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய நைசா, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்களை பார்த்த பலர் இது கஜோல் மகளா என கேட்கும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து உள்ளார். இவர் மட்டும் பாலிவுட்டில் அறிமுகமானால் சன்னி லியோனுக்கே டப் கொடுப்பார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..