இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இன்று தன் 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். தற்போது ஏ.ஆர் ரகுமானுக்கு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் ரோஜா படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ரோஜா திரைப்படத்தில் வரும் “புது வெள்ளை மழை மழை இங்கு பொழிகிறது” என்ற பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஏ.ஆர் ரகுமான் இதுவரையிலும் 6 தேசிய விருதுகள், 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள் என பல விருதுகளை பெற்று இசை உலகத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.