சென்னை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வாணி விலாசபுரம் கிராமத்திலிருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் டிராக்டர் டிரைவரான சண்முகத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.