உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள மௌரானிபூர் என்ற இடத்தில், கணவரை அவரது காதலியுடன் மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு அருகில் கணவர் தனது காதலியுடன் இருப்பதைக் கண்ட மனைவி, ஆத்திரமடைந்து நடுரோட்டில் வைத்து அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த ஹை-வோல்டேஜ் மோதலின் போது, இரு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டனர் மற்றும் அடித்துக்கொண்டனர். அங்கிருந்த கணவர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும் பயனில்லை.

“>

மேலும் சுற்றியிருந்த பொதுமக்கள் இந்தச் சம்பவத்தை அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர், இதற்கிடையில் அங்கிருந்த ஒருவர் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. இறுதியாக, அங்கிருந்த மக்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து, காதலியை அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.