“கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அசுர பலத்துடன் இருந்த திமுக, ஒட்டுமொத்த தமிழகமுமே ஸ்தம்பிக்கும் வகையில் படுதோல்வியைச் சந்தித்தது.
வெறும் 10 அல்லது 20 இடங்களை மட்டுமே பிடிக்கும் என அரசியல் கணிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 108 தொகுதிகளில் மெகா வெற்றி பெற்று கோட்டையைக் கைப்பற்றிய அதிர்ச்சி இன்னும் திமுக கூடாரத்தை விட்டு விலகவில்லை.

அதைவிடப் பெரும் பேரிடியாக, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது சொந்தக் கோட்டையான கொளத்தூர் தொகுதியிலேயே தோற்றுப் போனது திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் நெஞ்சைப் பிளக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நேற்று கொளத்தூரில் நடைபெற்ற உருக்கமான பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திராவிட இயக்கத் தூணும் பிரபல நடிகருமான சத்யராஜ், மேடையிலேயே தேம்பித் தேம்பி அழுதுகொண்டே பேசிய காட்சிகள் தற்பொழுது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
‘ஸ்டாலின் எவ்வளவு பெரிய தலைவர்.. அவர் தலைவருக்கெல்லாம் தலைவர்.. அவர் இந்த கொளத்தூரில் தோற்றிருக்கவே கூடாது! நீங்க படுங்க.. பட்டு திருந்துங்க.. தப்பு பண்ணாதான் உங்களுக்குப் புரியும்’ என வாக்காளர்களை நோக்கிக் குமுறினார்.
மேலும், ‘பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஸ்டாலின் மட்டுமே இன்றும் சிறந்த அரசியலைச் செய்து வருகிறார்; 1967-ல் அண்ணா ஆட்சியில்தான் தமிழ்நாடு நிமிர்ந்தது, கலைஞர் ஆட்சியில் வளமாகியது, அதை அடுத்த கட்டத்திற்குத் தூக்கிச் சுமந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் எங்களுக்கு இன்றும், எப்போதும் முதலமைச்சர்’ என சத்யராஜ் உணர்ச்சிப் பெருக்கோடு ஆக்ரோஷமாகப் பேசியது, தற்பொழுது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.”
