அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் அரங்கேறிய சில ரகசிய அரசியல் நகர்வுகளை உடைத்து ஒட்டுமொத்த மேடையையும் அதிர வைத்துள்ளார்.
‘நமது கூட்டணியில் இருந்த சில கட்சித் தலைவர்கள் என்னிடம் வந்து மாற்றுப் பாதை குறித்துக் கேட்டபோது, நீங்கள் தாராளமாகச் செல்லுங்கள், அது உங்கள் விருப்பம், உங்கள் ஜனநாயக உரிமை, நான் உங்களைத் தடுக்க மாட்டேன்’ என்று பெருந்தன்மையோடு வழியனுப்பி வைத்ததாக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘அப்படி நான் அவர்களைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டு, ஜனாதிபதி ஆட்சி (President’s Rule) வந்துவிடக்கூடாது; அதன் மூலம் மறைமுகமாகப் பாஜகவின் ஆட்சி தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகத் தெளிவாக இருந்தேன்’ என டெல்லி மேலிடத்திற்கும், தற்போதைய ஆளும்கட்சியான தவெக-விற்கும் ஒரே நேரத்தில் ‘செக்’ வைக்கும் வகையில் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
ஸ்டாலினின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரங்களை தற்பொழுது ஒட்டுமொத்தமாக உலுக்கியெடுத்துள்ளது.”
