திமுக தலைவரை தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விமர்சித்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தற்பொழுது தவெகவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் மிகக் கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.
‘தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்… நாங்க அதை பண்ணுவோம் இதை பண்ணுவோம்னு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து இன்னைக்கு ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்காங்க’ எனத் தவெக அரசை மேயர் பிரியா ஓப்பனாகவே சாடியுள்ளார்.
’தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்….’ நாங்க அத பண்ணுவோம் இத பண்ணுவோம்னு பொய்யான வாக்குறுதி கொடுத்து இன்னைக்கு ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்காங்க…
த.வெ.க பெயரையே குறிப்பிடாமல் தமிழக அரசை விமர்சித்த மேயர் பிரியா.!#Chennai | #MayorPriya | #DMK | #TVK | #PolimerNews pic.twitter.com/7DdtxHp55E
— Polimer News (@polimernews) June 6, 2026
“>
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், திமுகவிற்கும் ஆளும்கட்சியான தவெகவிற்கும் இடையே வெடித்துள்ள இந்த வார்த்தை மோதல், தமிழக அரசியல் வட்டாரங்களை ஒட்டுமொத்தமாக அதிர வைத்துள்ளது.”
