ஐபிஎல் 2026 தொடரில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி20 அணியில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் பல முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், இந்த இளம் வீரருக்கு தற்போதைய அணியில் இடம் கிடைப்பது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் தற்போதைய தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் மிகச்சிறந்த பார்மில் இருப்பதால், இவர்களை நீக்கிவிட்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிப்பது கடினம் என்று ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
இது குறிப்பாக, சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றிருப்பதாலும், அபிஷேக் சர்மா டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதாலும், அணியின் சமநிலையைக் கருத்தில் கொண்டு வைபவ் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
