“தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தற்பொழுது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், தவெக அரசு தற்பொழுது அதிரடியான ஒரு  முடிவை எடுத்துள்ளது.

மதுரையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ‘திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழைய நிலையே தற்போதும் நீடிக்கும்’ என்று  அறிவித்துள்ளார்.

மேலும், ‘திருப்பரங்குன்றம் மக்கள் எப்போதும் அமைதியையே விரும்புவதால், ஆன்மீக பூமியான அங்கு தேவையற்ற குழப்பங்களை விளைவிக்க முயலும் எந்தவொரு மதவாத சக்தியையும் தங்களது தவெக அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ என்று மிகக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக அரசின் இந்த அதிரடி ‘ஆன்மீக செக்’ மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிரான சவுக்கடிப் பேச்சு, தென் மாவட்ட அரசியல் களத்தில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.