தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக நகர கிளையில் சண்முகம் என்பவர் டவுன் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சண்முகத்திற்கு வேலை வழங்காமலும், விடுமுறை அளிக்காமலும் இருந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல் சண்முகம் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வழக்கமான பேருந்தில் செல்வதற்கு பதிலாக சண்முகத்திற்கு வேறு பேருந்தில் செல்வதற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனால் சண்முகம் மன உளைச்சலில் தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சண்முகத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். அவரை பக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.