ராமநாதபுரம் மாநாட்டில் பேசிய சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தனது உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்தினார். “அவரை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது நான்தான்; ஆனால் பெங்களூர் சிறைக்கு நான் சென்ற பிறகு, என்னை கட்சியை விட்டு நீக்கினார். அவர் ஒரு நல்லவர் என்றால் அவர் பெயரை நான் உச்சரிக்கலாம், ஆனால் அவர் பெயரைச் சொல்லக்கூட எனக்கு விருப்பமில்லை” என்று கொந்தளித்தார்.

​தன்னைச் சிறைக்கு அனுப்பிய கையோடு, தன்னைத் தூக்கியெறியத் துணிந்த எடப்பாடியின் செயலைத் துரோகம் என்று வர்ணித்த சசிகலா, தான் சிறையில் இருந்தபோது பரோல் பெறுவதற்குக்கூட எடப்பாடி அரசு முட்டுக்கட்டை போட்டதாகப் பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எடப்பாடி பழனிசாமிக்கும் தமக்கும் இடையிலான உறவு இனி ஒருபோதும் ஒட்டாது என்பதைச் சசிகலாவின் இந்த ஆவேசப் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.