ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பேசிய சசிகலா, அவர் மீது தமக்குத் தனிப்பட்ட வருத்தம் ஏதும் இல்லை என்பதைப் பதிவு செய்தார். “ஓபிஎஸ் மீது எந்தத் தவறும் இல்லை; ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாகவே நான் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடிவு செய்தேன். அந்தச் சூழலில் யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு ஓபிஎஸ் மெரினாவில் போய் தர்மயுத்தம் என்று உட்கார்ந்துவிட்டார். அதுவே இன்று வரை அவருக்குப் பெரிய பிரச்சனையாக முடிந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.
ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுத்தது யார் என்பதை வெளிப்படையாகச் சொல்லாத சசிகலா, அவர் எடுத்த தவறான முடிவே இன்றைய நிலைக்குக் காரணம் என்று வருத்தப்பட்டார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதில் ஓபிஎஸ்-க்கு ஆதரவான ஒரு மென்மையான போக்கைச் சசிகலா கடைப்பிடிப்பது அவரது பேச்சின் மூலம் தெரிகிறது.
