செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோக்கிய பயலுக… ஊரை அடிச்சு உலையில போடுறவன்…. பல்லாயிரக்கணக்கான பெண்களை கெடுத்து வன்கொடுமை செய்றவன் எல்லாம் நல்லவனாக நாட்டை ஆண்டு சுத்திட்டு இருக்கும்போது…. அநீதியை எதிர்த்து போராடிட்டு இருக்கிற நான் ஏன் அச்சப்படணும்?   நான் ஏன் பயப்படனும்.

ஜெயில் கட்டினது எங்களுக்காக என  நினைக்கிற பரம்பரை நாங்க. இவன் பூராம் சட்டம் படிச்சது எங்களுக்கு வழக்கு பார்க்க தான். இல்லன்னா…  அவன் பட்டினியா கிடந்தது செத்து போயிருவேன்.  எல்லாருமே காந்தி ஆயிட்டா எப்படி ?  காவல் நிலையங்கள் எல்லாம் நூலகமா மாறிடும் இல்ல. வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றேன். இது திமுக தான் காரணம்.  இந்த ஆட்சிக்கு தெரியாம, அங்கு இருக்கிறவங்களுக்கு தெரியாம இது நகரவில்லை.

அவர்களை கூட்டி வந்தது யாரு ? வண்டி வாடகை கொடுத்து தங்க வச்சது யாரு ? இதுக்கு என்ன அவசியம் இருக்கிறது?  இரண்டு ஆண்டுகளாக என்ன பண்ணுனீங்க ? இந்த வழக்க தூசி தட்டி எடுக்க வேண்டியதுதானே…  ரெண்டு மாசத்துல தேர்தல் வரும் போது இப்ப தொட வேண்டிய அவசியம் ஏன் வருது ? என்னை சமாளிக்க முடியல. நான் எழுப்புகிற கேள்விக்கு உங்களுக்கு பதில் இல்லை.  சனாதனத்தை… அதை.. இதை… இங்க இருக்கிற பிரச்சினைகளை  எல்லாம் இந்த ரெண்டு பொம்பளைகளை வைத்து மூடிட்டீங்க.  மறுபடியும் நான் திறப்பேன் என தெரிவித்தார்.