செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, தமிழ்நாட்டில் பாலியல் ரீதியான தாக்குதல், பாலியல் ரீதியான அச்சுறுத்தலால்  சினிமா துறையில இருக்கிற நடிகைகள் தற்கொலை செய்து மாண்டு போறாங்க.  இனிவரும் காலங்களில் சினிமா துறையில் இருக்கக்கூடிய நடிகைகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உண்டாக்கும் போது அவங்க தற்கொலைக்கு போகக்கூடாது என்பதற்காக…

அவங்க கூட வலிமையான சக்தி இருந்தாங்கன்னா… அவங்களுக்கு அட்வைஸ் பண்ணி,  அவங்கள நல்வழிப்படுத்தி….  அவங்களுக்கு சட்டத்துல தண்டனை வாங்கி கொடுக்கிறதுக்கு இவ்வளவு சட்டப்பிரிவுகள் இருக்குன்னு சொல்லிக் கொடுத்து…  அவர்களை பாதுகாப்பு பண்றதுக்காக  நடிகை விஜயலட்சுமி அவர்கள் சீமான் அவர்களால் பாலியல் ரீதியாக தாக்குதலுக்கும்,  பாலியல் ரீதியான அச்சுறுத்தலுக்கும் உண்டாகி…

கர்நாடகா மாநிலம்   பெங்களூரில் இருந்து என்னை தொடர்பு கொண்டு… என்னிடம் பாதுகாப்பு கேட்டு…. என் மூலமாக தான் காவல்துறையில் புகார் மனு அளித்திருக்கிறார்கள். அதன் பெயர்ல நடிகை விஜயலட்சுமி அவர்களுக்கு நான் என்னுடைய இடத்தில் அவர்களுக்கு உண்ண உணவு, இருக்க இடம்,  மூன்றடுக்கு பாதுகாப்புல…  என்னோட பாதுகாப்புல அவங்கள வச்சி இருந்தேன். இதுல எந்த சமுதாயமும் இல்லை…. அவங்க சமுதாயமோ…  நான் குறிப்பிட்ட என்னோட சமுதாயமும் ஹெல்ப் பண்ணல.

என் கட்சியை 2014-ல் தடை செய்யணும்.  என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தூக்கி வைக்கணும்னு என தமிழக ஆளுநர் ரோசையா அவர்கள்கிட்ட புகார் கொடுத்தாங்க. அப்போ ஏன் வரலாறு சீமான் அவர்களுக்கு தெரியும்.  எனக்குன்னு ஒரு அவதாரம் இருக்குது. நான் சிங்கிளா வந்து,  போறேன்னு நினைக்காதீங்க.

என் இன்னொரு அவதாரத்தை தரித்தேன் என்றால் ? தமிழ்நாட்டுல நாம் தமிழர் கட்சியை நடத்த முடியாது.நீங்க வன்முறையில் ஈடுபட்டீங்கன்னா…  என்ன பத்தி எல்லாருக்கும் தெரியும். நான் களத்துல  இன்னும் பிளான் பண்ணல. நான் பிளான் பண்ணி… ஸ்கெட்ச் பண்ணி இறங்குன…. நாம் தமிழர் கட்சி காலி தமிழ் நாட்டுல என தெரிவித்தார்.