சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க “ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்” திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதை அதிகரிக்க அரசு சார்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் சலுகைகளை வழங்கி வருகிறது.

அவ்வகையில் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ட்ரிப் டாட் காம் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜேம்ஸ் லியாங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வருடம் 1.13 லட்சம் வைத்து ஐந்து வருடங்கள் 5.65 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.