பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் நகரில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறைச்சாலையில் பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என பலர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களில் சிலர் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

இதனால் காவல்துறையினருக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கலவரத்தை பயன்படுத்திய 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பி சென்றுள்ளனர். அவர்களில் சிலர் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.