சிறுபான்மையினருக்குரிய கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட நீண்ட கால நடைமுறையை முறியடித்து, பல்கலைக்கழக சேர்க்கையில் இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் தடை செய்துள்ளது.

ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், 6 நீதிபதிகள் இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை தடை செய்ய ஆதரித்தனர். அதே நேரம் 3 நீதிபதிகள் மட்டும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். எனவே இனம் மற்றும் சாதி அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைகளை அமெரிக்க உச்சநீதிமன்றமானது தடைசெய்கிறது.