பொதுவாகவே நாம் வளர்க்கும் ஒரு நாயின் நாக்கு தோராயமாக 5 செ.மீ. வரைதான்  இருக்கும். ஆனால், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற நாய்க்கு, நாக்கு, 5.6 அங்குலங்கள் நீளம் உள்ளது. நாய்க்கு,வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாக்கு இருப்பதை அறிந்த உரிமையாளர், கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து, ராக்கி, நீளமான நாக்கை கொண்ட நாய் என்ற சாதனை படைத்தது. இதற்குமுன் கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கு 3-4 அங்குலம் இருந்ததாக கூறப்படுகிறது.