தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் என்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கலைஞர் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முதல்வருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன்னை சந்திக்க வரும் நபர்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்க இருக்கிறார். அதன்படி மஞ்சள் பையில் மரக்கன்றுகளை வைத்து முதல்வர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.