விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சலூரின் அருகே காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவர் தாம்பரம் செல்வதற்காக கடந்த 8ந் தேதி இரவு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவரை நோக்கி 4 பேர் வந்துள்ளனர்.
இவர்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக வந்திருப்பார்கள் என்று நினைத்த பாண்டியராஜனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வந்த 4 பேர் திடீரென, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தொலைபேசி மற்றும் பணத்தை கேட்டுள்ளனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் அதிர்ச்சியில் இருந்த அவரிடம் அனைத்தையும் மிரட்டி வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பாண்டியராஜன் எழும்பூர் இருப்புப் பாதையில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் ராஜு பாய் மற்றும் கார்த்திக் என்ற இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. மேலும் அவர்களைக் கண்டறிந்து கைது செய்து கைப்பேசி மற்றும் பணத்தை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.