கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் தங்கமணி என்பவருக்கும் திருமணம் நிகழ்ந்து 11 நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த தங்கமணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தங்கமணியை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிருஷ்ணன் இந்த சம்பவம் குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் திருமணமான 11 நாளில் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.