சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டது. கல்லூரிக்கு செல்பவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சேவை அரை மணி நேரம் தாமதமாக கிளம்பியதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அதாவது வடசென்னை திருவொற்றியூர் விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் செல்லக்கூடிய வழித்தடத்தில் சிக்னல் பிரச்சனை காரணமாக அரை மணி நேரம் தாமதமாக மெட்ரோ ரயில் இயங்கியது. இது தற்போது சரி செய்யப்பட்டு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. மேலும் இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய பயணிகள் சற்று நேரம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்.