தமிழகம், புதுச்சேரி,  காரைக்காலில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்  வேகமாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்   மிதமான மழை பெய்ய வாய்ப்பு. வரும் 12 – 16ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.