திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“மதுரைக்கார வியாபாரிக்கு பிரதமர் கொடுத்த சர்ப்ரைஸ்!”… பிஎம் ஸ்வாநிதி திட்டம் மூலம் மாறிய ஏழை வியாபாரியின் வாழ்க்கை… பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்பெஷல் கடிதம்..!!!
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பலரின் வாழ்க்கையில் எத்தகைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாலையோர வியாபாரியின் வெற்றிப் பயணம் சிறந்த உதாரணமாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சுமை மற்றும்…
Read more“ஹெல்மெட்டோட வந்து அப்படியே ஓட்டிட்டு போயிடுறாங்க!”… சென்னையில் தொடரும் பைக் திருட்டுகள்… பீதியில் உறைந்துபோன தாம்பரம் பகுதி மக்கள்… சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்..!!!!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், குறிப்பாகத் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு முன்பு…
Read more