மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் வளர்ச்சிக்காக “யஸஸ்வி” என்னும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நுழைவு தேர்வில் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர் கிஷோர் ஜான் மாநில அளவில் 2-வது இடத்தையும், நிதிஷ் 6-வது இடத்தையும், மாரி செல்வம் 7-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் மாணவர்களான ரத்திகா, அரவிந்த் சித்தார்த், நித்யா, சுவேகா, பவன்ஸ், கோகுல், சீனிவாஸ் கவி, செல்வ கவிதா, அகிலா, துர்கா, தனலட்சுமி ஆகியோர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றனர். இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் ராஜசேகரன், முதல்வர் மகேஸ்வரி, அகாடமி டைரக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.