தேனி மாவட்டத்திலுள்ள உப்புக்கோட்டை பகுதியில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அந்த  அரிசி பயன்படுத்த முடியாத அளவிற்கு தரமற்றதாக இருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளது.

மேலும் கடைகளில் ரேஷன் அரிசியை வாங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததால் அரிசி தேக்கமடைந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, அரிசி விநியோகம் பற்றிகேட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை. எனவே தரமான அரிசியை வழங்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.