BSNL அவ்வப்போது தன் வாடிக்கையாளர்களுக்கு பல விதமான மலிவு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. BSNL-ன் திட்டங்கள் மிக மலிவான விலையில் கிடைத்தாலும், இதில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் கிடைக்கிறது.

BSNL ரூ. 269 ரீசார்ஜ் திட்டம்

இத்திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் அதாவது வாய்ஸ் கால் வசதியானது கிடைக்கிறது. அதோடு வரம்பற்ற தரவு வசதி இந்த திட்டத்தில் இருக்கிறது. இதனிடையே 2GB/day ஆனவுடன் வேகம் 40Kbps ஆக குறையும். இதில் நாளொன்றுக்கு 100 SMS அனுப்ப இயலும்.

BSNL ட்யூன்ஸ், EROS Now, M/s ONE97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடட் வழங்கக்கூடிய ஹார்டி மொபைல் கேம்ஸ் சர்வீஸ், M/s Onmobile Global Ltd வழங்கும் ப்ரோக்ரெசிவ் வெப் ஆப் (Progressive Web App(PWA))-ல் சேலஞ்சஸ் அரேனா மொபைல் கேமிங் சர்வீஸ், M/s Tellyfonic Digital Media வழங்கும் Lystn மியூசிக் சர்வீஸ், M/s Ubarri Marketing Private Limited வழங்கும் லோக்துன், ஜிங், ஆஸ்ட்ரோடெல் மற்றும் கேம்ஆன் சர்வீசஸ், M/S ADVYSORS INC வழங்கும் GAMEIUM பிரீமியம் கேமிங் பயன்பாடு போன்ற அம்சங்கள் இத்திட்டத்தில் கிடைக்கும்.