சுய ஓட்டுதல் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 3 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்ப பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விற்பனையான டெஸ்லா கார்களை திரும்பப் பெறுவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 5% சரிந்தன.

இதனிடையே ஓட்டுனர் உரிமைக்காக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கார்களில் விபத்து நேரிடும் அபாயம் அதிகரிக்க கூடும் என அமெரிக்க வாகன ஒழுங்குமுறை ஆணை தெரிவித்திருந்தது. இதனிடையே சுய ஓட்டுதல் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 3 லட்சத்தை 60 ஆயிரம் வாகனங்கள் திரும்ப பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.