மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ராஸ் தனூரா ஆலை மீது ஈரான் தனது ‘ஷாஹெட்-136’ டிரோன்களை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு நாளைக்கு 5,50,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட இந்த ஆலை, சவுதி கச்சா எண்ணெய்க்கான முக்கிய ஏற்றுமதி முனையமாகச் செயல்பட்டு வந்த நிலையில், இந்தத் தாக்குதலால் சவுதி அராம்கோ ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
