ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காகக் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் இருந்து மெக்கா சென்ற தமிழக அரசின் தலைமை ஹாஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி, அங்குச் சிக்கித் தவித்து வருகிறார்.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக அவரால் மீண்டும் ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் தாயகம் திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.