ஈரான் தேசம் இதுவரை கண்டிராத ஒரு மிக மோசமான வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்கள் உட்பட மொத்தம் 131 நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்து போயுள்ளது.
விண்ணிலிருந்து பொழிந்த ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால் குடியிருப்புப் பகுதிகள் உருக்குலைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலில் இதுவரை 555 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், காயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தத் திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதுடன், சர்வதேச நாடுகள் இந்தச் சம்பவத்தை அதிர்ச்சியுடன் உற்றுநோக்கி வருகின்றன.
