தமிழகத்தில் சின்னம்மை நோய் பாதிப்பு குறித்துப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களைப் பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும், நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாகக் குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்பக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும் என்றும், பாதிப்பு உள்ளவர்கள் சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.