ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியை ஈரான் அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

இது குறித்துப் பேசிய ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி, அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்தப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.