100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக தொலைக்காட்சி விவகாரத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக ஐபிஎல் அதிகாரி சம்பத்குமார், ஜி மீடியா கார்ப்பரேஷன், ஹிந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேசன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டோருக்கு எதிராக 100 கோடி ரூபாய் மானிய நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் டோனி கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தோணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வழக்கில் சாட்சி விசாரணையை துவங்க வேண்டும். அதற்கு வாக்குமூலம் அளிக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். பிரபலம் என்பதால் மாஸ்டர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க நேரில் ஆஜாரானால் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் தனக்கு வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கூறினார்.

அக்டோபர் 20ஆம் தேதியிலிருந்து டிசம்பர் பத்தாம் தேதி இடையில் அனைத்து தரப்பினரின் வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்தால் அங்கு வாக்குமூலம் அளிக்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பட்டியலில் இருந்து வழக்கறிஞர் ஆணையரை தேர்வு செய்வதாக தெரிவித்தார் தோனி வாக்குமூலம் பதிவும் முடிந்த பின்பு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்தார்.