8 வருட டேட்டிங்கிற்குப் பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நீண்டகாலத் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான் 40 வயது, ரோட்ரிகஸுக்கு ஒரு கண்கவர் வைர மோதிரத்தை அணிவித்தார். அந்த வைர மோதிரத்தின் மதிப்பு 25 கோடி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ தங்களது காதலை வெளிப்படையாக தெரிவித்தனர். ஜனவரி மாதம் சூரிச்சல் நடந்த FIFA கால்பந்து விருதுகளில் இருவரும் அறிமுகமானார்கள். திருமண நிச்சயதார்த்த மோதிரம் அணிந்தபடி எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தங்களது திருமணத்தை அறிவித்துள்ளனர்.