உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தவெக அரசு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவிட மாட்டோம் என அந்தத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார் முஷ்டியை மடக்குவதாகவும், தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பதுதான் தங்களின் அரசின் நிலைப்பாடு என மற்றொரு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முட்டுக் கொடுத்துப் பேசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முருக பக்தர்களுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் இவ்வாறு சலங்கை கட்டி ஆடிக்கொண்டிருக்கும் வேளையில், தங்களை “தலைமை” என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காப்பது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் நாற்காலியில் இருக்கும் விஜய் ஒரு “பொம்மை முதலமைச்சர்” போலச் செயல்படுகிறார் எனச் சாடியுள்ள அவர், அமைச்சர்களின் இத்தகைய போக்குகளுக்கு மத்தியில் தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதலமைச்சர் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
பொம்மை, பொம்மை, பொம்மை பார்! திரு. ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்!
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்எல்ஏவும் தவெக அமைச்சருமான திரு. @CTR_Nirmalkumar முஷ்டியை மடக்குகிறார், தீபத்தூணை…
— Nainar Nagenthran (@NainarBJP) June 8, 2026
“>
