ஏமனில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹுத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹூத்திகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணையை ஏவி பதிலடி தாக்குதல்களும் நடத்தினர். இதனால் மத்திய கிழக்கில் உள்ள பகுதிகளில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல் ரஹாவி கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது இச்சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
