தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை தவிர்த்து விட்டு தன்னுடைய உரையை முடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநர் உரையில் மூன்றாம் பக்கத்தில் முதல் பாராவில் திராவிட மாடல் என இருந்ததால்,  ஐந்து வரிகளை தவிர்த்து உரையாற்றினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக தமிழக அரசு எழுதிக் கொடுப்பதை சட்டப்பேரவையில் படிப்பது தான் ஆளுநர் மரபு. ஆனால் மரபை மீறி தமிழக ஆளுநர் செயல்படுகிறார் என்று திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.