பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து கூட்டுறவு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை மண்டல இணைப்பதியாளர் வழங்கியுள்ளார். அதாவது பொங்கல் பரிசு தொகப்பில் வழங்கப்படும் பச்சரிசியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது.

அதாவது தூய்மையான, வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும். 6 அடி அல்லது ஆறு அடிக்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். இரண்டு 500 ரூபாய் தாள்களை மட்டுமே வழங்க வேண்டும். பயனாளர்களை வேறு தேதிக்கு வாருங்கள் என்று சொல்லக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.