தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக மீனவர்கள் கைது செய்வதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என ஆளுநர் ரவி உரை.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. மாநில உரிமையை பறிக்கும் வகையில் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நீட் பறிக்கிறது. நீட் மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஜனாதி ஒப்புதலுக்காக இருக்கின்றது.

பேராசிரியர் அன்பழகன் பெயரில் அரசு பள்ளியில் மேம்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ் குடிகளுக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நேர் எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என ஆளுநர் உரை ஆற்றினார்.