தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உட்பட 16 கட்சிகள் இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முறை போட்டிகள் இந்த முறை தமிழகத்தில் நிலவுகிறது. இதில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லை என தற்போது தகவல்கள் பரவி வருகிறது. அதாவது தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி பேச்சு வார்த்தையில் சிக்கல் எழுந்ததாகவும் இதனால் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் செய்திகள் பரவியது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இதற்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூறியதாவது,
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முன்கூட்டியே தொடங்கி சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. எம்பி ஜோதிமணி கூறிய புகார் தொடர்பாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று எப்போது சொன்னோம். ஒரு மாதத்திற்கு முன்பாக தான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினோம். மேலும் தேர்தல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் 5000 மேற்பட்ட விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதன் மூலம் கூட்டணி தொடர்பான சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
