செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்குகிறது. கனமழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அதனைப் போலவே நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் கனமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.