தமிழக வெற்றிச் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேர்தல் பரப்புரை பயணத்தின் போது, இன்று தூத்துக்குடியில் பின்தொடர்ந்து வந்த பைக்குகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பகுதியில் இன்று நடைபெற்ற பரப்புரை பயணத்தின் போது, விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகச் சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஒரு பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத பின்னால் வந்த மற்ற பைக்குகளும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சமீபகாலமாக விஜய்யின் பரப்புரை பயணங்களில் இதுபோன்ற பின்தொடரும் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

 

அதே நேரத்தில் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்தவர்களை பவுன்சர்கள் கீழே தள்ளிவிடும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னுடைய வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று விஜய் பலமுறை அறிவுறுத்தியும் தொண்டர்கள் அவருடைய பேச்சை கேட்காமல் இப்படி அடுத்தடுத்து விபத்தில் சிக்குவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.