தவெக தலைவர் விஜய் நடத்தி வரும் பிரசாரப் பயணம் குறித்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தேவையற்றவை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்கு கூடும் திரளான மக்கள் கூட்டம் ஓட்டுகளாக மாறுமா என்பது தேர்தல் முடிவில் தான் வெளிப்படும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், தான் விஜய் தலைமையிலான தவெக கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக பரவிவரும் செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே என்றும் அதற்கு எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் OPS முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெகவுடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக பேசப்படும் நிலையில், அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
