அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் நான் இருக்க மாட்டேன்” என்று தெளிவாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, இன்று சென்னையில் செங்கோட்டையன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் நீண்ட இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. தற்போது வரை தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காத செங்கோட்டையன், இந்த சந்திப்புக்குப் பிறகு புதிய அறிவிப்பு வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், தமிழக அரசியல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.