தவெக தலைவர் விஜய் குறித்து நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், அவர் நேரடியாக விஜய்யை எதிர்த்து போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இன்று (செப்டம்பர் 24) செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த கேள்விக்கே பதிலளித்தார்.

அப்போது சீமான், “விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமாகும். நான் அவரை எதிரி என நினைக்கவில்லை. ஒரு அண்ணனாக தம்பிக்கு அறிவுரை சொல்கிறேன்.

இப்போது அரசியலில் செய்ய வேண்டிய தவறுகளைச் சரி செய்து கொள்ளவில்லை என்றால், பின்னர் மக்கள் அவரை நிராகரித்து விடுவார்கள், வேறு அரசியல் கட்சிகள் எடுத்து சொல்வார்கள் ” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, விஜயின் அரசியல் பயணத்துக்கு சவாலாகப் பார்க்கப்படுகிறது.