அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ளது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்டம்பர் 23) கூடலூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது, “திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பிளவு ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், குறிப்பாக கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு கேட்க ஆரம்பித்துவிட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “இது வெறும் தொடக்கம் மட்டுமே. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எதிர்காலத்தில் இன்னும் பெரிய பிளவுகள் வெளிப்படும். ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் தலைவர்கள் திமுக அரசுக்கு சவாலாக மாற உள்ளனர்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
